விதி வலியது
காசி மாநகரத்தில் பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர் பல கலைகளையும் கற்று தேர்ந்தவர்.
முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக தனது சீடர்களை அழைத்து தன் வீட்டில் வளர்ந்து வரும்
ஆட்டினை நன்கு குளிப்பாட்டி வரச்சொன்னார் ஆட்டின் கழுத்தில் மாலை போட்டு மஞ்சள் சந்தனம்
தெளித்து துணியினை கழுத்தில் கட்டி கொண்டுவரச் சொன்னார். சீடர்களும் பண்டிதர் கூறியபடி
ஆட்டினை மங்கலப் பொருள் மாலை அணிவித்து கொண்டு
வந்தார்கள்.
அப்போது ஆட்டிற்கு முன்பு நினைவு வந்தது இன்றுடன் தனது பாவங்களும்
நீங்கிவிடும். இனி இவ்வுலகில் இருந்து விடுதலை பெற்று விடலாம் என தெரிய வந்தது. உடனே
அந்த ஆடு சிரிக்கத் தொடங்கியது பிறகு அழத் தொடங்கியது. ஆடு சிரிப்பையும் அழுவதையும் கண்ட பண்டிதர் மற்றும் அவரது சீடர்களும்
வியப்பு அடைந்தனர். ஏன் அழுதாய் என்று கேட்டார்கள். ஐயா எனக்கு முன் பிறப்பினை அறியும்
சக்தி கிடைத்தது அதனால் தான் முதலில் சிரித்தேன் பிறகு அழுதேன். நான் முன்பிறவியில் உங்களைப் போலவே
சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்த பண்டிதனாக இருந்தேன். நானும் இவ்வாறு ஒரு ஆட்டினை வெட்டி கொன்றேன்.
அந்த பாவத்திற்காக நான் ஆடாக பிறந்தேன். ஒவ்வொரு முறையும் என் தலை வெட்டப்பட்டது. இது 500வது பிறவி ஆகும். என் தலை வெட்டப்படும் போது என்
பாவங்கள் முழுவதும் நீங்கி விடும் என்று கூறியது. உங்கள் தலையும் 500 முறை தலை வெட்டப்பட்ட இருப்பதை நினைத்தேன் அதனால் அழுகை
வந்தது என்றது. இதைக் கேட்டதும் பண்டிதர் மனம் வருந்தினார் தனது அறியாமையை எண்ணி தலை
குனிந்தார். பல சாஸ்திர நூல்களைப் பயின்று
உயிர்வதை தவறு என்பதை இதுவரை உணராத இருந்ததை எண்ணி மனம் கலங்கினார்.
அறியாமல் தவறு செய்ய இருந்தேன். என்னை திருத்தி
விட்டாய் நான் உன்னை கொல்ல மாட்டேன் என்று
கூறினார். ஆட்டை அவிழ்த்து விட்டார். ஆனால் ஆடு எங்கேயும் செல்லவில்லை விதி வலியது எனது பாவம் மிகவும் வலிமையானது. நீங்கள் தரும் பாதுகாப்பு
மிகவும் பலவீனமானது என்று கூறியது. இருப்பினும் தங்கள் விருப்பப் படி உங்கள் சீடர்களும்
என்னுடன் வரட்டும் என்று கூறியது. மலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது மரத்தில் உள்ள இலைகளை பிடித்துத்
தின்னும் போது அப்போது திடீரென வானத்தில் ஒரு
இடி தோன்றியது அது ஆட்டின் கழுத்தை துண்டாக்கியது. அருகில் இருந்தவர்களுக்கு
எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. இதை கண்ணெதிரே
கண்ட சீடர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உலக வாழ்க்கை துன்பம் நிறைந்தது இதனை உணர்ந்து கொண்டால்
உயிர் உள்ளவை எல்லாம் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்வதை நிறுத்திவிடும் கொலை செய்பவனது
விதி கொடூரமானது. தன்னை போலவே இன்பம் உள்ள
உயிர்களை எவன் தன் சுகம் கருதி துன்புறுத்தும்
அவர்களுக்கு மறுமை இன்பம் கிடைப்பதில்லை.
கருத்துகள் இல்லை