நினைவாற்றல்( புலன்களின் கவனம்)
நினைவாற்றல்( புலன்களின் கவனம்)
நமது புலன்கள் நினைவாற்றலில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய மனதில் பதிவு செய்யப்படுகிற பொருட்கள் எல்லாம் நம் புலன்கள் என்னும் வாசல் வழியாக உள்ளே சென்ற உணர்வுதான். மரத்தை காட்டி இது என்ன என்று கேள்வி கேட்டால் அது மரம் என்று சொல்கிறோமே அது கண் என்னும் புலனால் பதிவு செய்யப்படுகிற உணர்வு நாம் ஏற்கனவே பார்த்து இருக்கின்ற மரத்தின் தோற்றத்துடன் நாம் இப்போது பார்க்கும் மரத்தின் தோற்றமும் ஒத்துப் போவதால் இதை பார்த்தவுடன் நாம் மரம் என்றுசொல்லி விடுகிறோம். அதுபோல் திரைப்படப் பாடலை கேட்டவுடன் அந்த பாடலை பாடியது இவர்தான் என்று சொல்கிறோமே ஏற்கனவே அந்தப் பாடகர் குரல் மூளையில் பதிந்து இருக்கிறது. அது செவிவழி உணர்வு கண்ணை மூடிக்கொண்டு ஒரு இனிப்பை சுவைதால் , இது என்ன இனிப்பு என்றுசொல்லி விடுகிறோம். நாம் ஒரு தோட்டத்திற்கு சென்ற உடன் பூவாசத்தை உணர்ந்து கொள்கிறோமே அது மூக்கின் வழி உணர்வு அதே அதுபோல் நாம் உடலை தீண்டும் பொருளை வைத்து நாம் அந்த பொருளை அடையாளம் கண்டு கொள்கிறோமே அது தோல் வழி உணர்வு.
ஆக நம் புலன்கள் நம் நினைவாற்றல் சக்தியில் எத்தனை பங்கு கொள்கிறது என்று நாம் அறிய முடியும் பொதுவாக ஒரு விஷயம் உடலில் குறிப்பாக உறுப்புகளில் ஏதேனும் குறைபாடு உள்ளவர்கள் மற்ற புலன் உணர்வில் அதிக ஆற்றல் உள்ளவராக இருப்பார் கண் பார்வை இல்லாதவர்களுக்கு செவி ஆற்றல் அதிகமாக இருக்கும் காரணம் அவர்களுக்கு பார்வையே குரல்தான் ஐம்புலன்களின் வழியாக நாம் பழைய நினைவுகளை நினைவில் கொண்டுவர முடியும்.
என்றாலும் பார்த்தல் கேட்டல் வழியாகத்தான் அதிக சதவீதம் விஷயங்களை கற்கவும் அதை நினைவில் வைத்துக் கொள்ளவும் செய்கிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் அதுபோல் நாம் கேட்ட ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வது 20% என்றும் கண்களால் பார்த்து ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வது என்பது 30% என்றும் பார்த்த மற்றும் கேட்ட ஒரு விஷயத்தை 50% நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.
இறுதியாக நாம் பார்த்த மற்றும் அது குறித்து பேசுகின்ற ஒரு விஷயத்தை நாம் 80 முதல் 90 சதவீதம் நம் நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்றும் புலன்களின் உதவியால் நாம் எத்தனையோ பொருட்களை பாடங்களை நிகழ்வுகளை நினைவில் பதிய வைத்துக்கொள்ள முடியும். அது போல் தேவையான நேரத்தில் தேவையான விஷயங்களை வெளியே கொண்டுவர முடியும் ஒரே ஒரு விஷயம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் நம் புலன்கள் அத்தனையையும் விழிப்போடு வைத்திருக்க வேண்டும் . நம் புலன்கள் கூர்மையாக இருந்தால் நமது உள்வாங்கும் திறமையும் கற்பனைத் திறனையும் அதிகரிக்கிறது.

கருத்துகள் இல்லை