நினைவாற்றல் அதிகரிக்க
நினைவாற்றல் (ஆர்வம் அல்லது ஈடுபாடு இல்லாமை) நம் கையில் பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கின்ற கைக்கடிகாரத்தில் உள்ள வார்த்தைகள் நமக்கு தெரிவதில்லை. நாம் வாங்கிய புதிதில் ஒரு வேலை படித்து இருக்கலாம்.ஆனால் இன்று அது நம் நினைவில் இல்லை ஏன். நாம் நடந்து செல்லும் போது எத்தனை நபர்களை பார்க்கிறோம். அதில் யார் யார் என்னென்ன நிறத்தில் உடை அணிந்தவர்கள் என்பது நமது நினைவில் வருவதில்லை. ஒருவேளை நமக்கு ஒரு நீல நிற உடையை பிடித்து இருந்தால் அந்த மனிதரை சிலநேரம் நினைவில் வைக்கிறோம். நமக்கு பிடித்தமானது இங்கு ஞாபக சக்தியை வளர்த்து விடுகிறது. மற்ற மனிதர்களின் உடையின் நிறம் நமக்கு நினைவில் இல்லை காரணம் அவைகளில் நமக்கு ஆர்வம் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன் எத்தனை முறை காப்பி குடித்தோம் என்பது நமக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் நாம் ஒருவருக்கு கொடுத்த 2000 ரூபாய் நமக்கு நினைவில் இருக்கிறது. காரணம் அது நமக்கு முக்கியமான விஷயம் பணத்தை திரும்ப வரும் வரையில் நாம் அதை எப்படியாவது ஞாபகத்தில் வைத்திருக்க முடியாத பட்சத்தில் அதை டைரியில் குறித்து வைக்கின்றோம். அதனால் இங்கு ஞாபக சக்தி என்பது முக்கியத்துவத்திலும் அதன் மீது நாம் காட்டும் ஈடுபாட்டிலும் வருகிறது.
நினைவின் தொகுதிகளை இரண்டு வகையாக கூறலாம். 1.நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் 2.நாம்ஞாபகம் வைத்துக் கொள்ள விரும்புகின்ற விஷயங்கள். இந்த இரண்டு விஷயங்களின் குறுக்கீடு தான் ஒரு மனிதனை ஞாபகமறதிக்கு தள்ளுகிறது.
மேற்கூறிய இரண்டு வகைகளில் நமக்கு முக்கியமானது எது உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பிறகு உங்கள் கவனிக்கும் சக்தியை அதிகமாக்குங்கள். மனதை ஒருமுனைப்படுத்தும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். நம்மை சுற்றியுள்ள பொருட்களில் நமக்கு விருப்பமும் ஈடுபாடும் ஏற்படும்படி செய்ய வேண்டும். நமக்கு அதில் ஈடுபாடு அதிகமாக வேண்டும்.

கருத்துகள் இல்லை