நினைவாற்றலை அதிகரிக்கும் முறைகள் (1)
திரும்பத்திரும்பச்செய்தல் நினைவாற்றலில் பெரும் பங்கு திரும்ப செய்வதில் தான் உள்ளது. இது 90% உழைப்பு 10% ஆற்றல் யாருக்கு எதை நினைவில் வைக்க வேண்டுமோ அதைத் திரும்பத் திரும்ப நினைவூட்டி பார்ப்பதன் மூலம் அதை நம் மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியும். பொதுவாக பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போதிக்கப்படும் முறை. பாடத்தை மனப்பாடமாக அதை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்பதே சிலருக்கு ஒரு முறை படித்தவுடன் மனதில் பதிந்து விடலாம் சிலருக்கு இரண்டு முறை சிலருக்கு 10க்கும் மேற்பட்ட முறைகள் படித்தால்தான் மூளையில் பதியும். மாணவர்களாக இருந்தால் வினாடி வினா மனப்பாட செய்யுள்கள் கணித சூத்திரங்கள் போன்றவற்றை திரும்ப திரும்ப படிப்பார்கள். குழந்தைகள் பள்ளிக் கூடங்களில் கற்றுத்தரும் பாடங்களை மிக எளிதாக மனப்பாடம் செய்து விடுகிறார்கள். எப்படி என்றால் ஆடியோ கேசட்டுகளாக தற்போது கடைகளில் கிடைக்கின்றன. அதை வாங்கி திரும்ப திரும்ப கேட்கும் போது அப்பாடல்கள் குழந்தைகளின் மனதில் பதிந்துவிடுகின்றன. நமக்கு தேவையான மனிதர்களின் தொலைபேசி எண்களை சற்றும் நினைவூட்டி கொள்ளாமலேயே அழுத்தி தொடர்பு கொள்கிறோமே அது திரும்பத் திரும்ப நினைவூட்டியதன் விளைவே.
கருத்துகள் இல்லை