முட்டாள் அரசன்
முட்டாள் அரசன் மாமன்னர் ஒரு நாட்டை ஆண்டு வந்தார். அவரின் அமைச்சர் மிகவும் அறிவாளி. மனதைக் கவரக்கூடிய கதைகளினால் மன்னருக்கு அறிவுரை கூறி வந்தார். அவரின் கதைகள் மிகவும் அரசருக்கு பிடித்தமானது. ஒரு தடவை மாமன்னர் தன் அரண்மனைக்கு சென்றார். மன்னரின் பட்டத்தரசி தன்னுடைய தோழியுடன் பேசிக்கொண்டிருந்தாள். அச்சமயம் மன்னர் திடீரென்று உள்ளே சென்றார். ராணி எழுந்து நின்று சிரித்துக் கொண்டே சொன்னார். வாருங்கள் முட்டாள் அரசரே. மிகவும் மனவருந்தினார் மன்னர். ராணி ஒருபோதும் அவமதித்ததில்லை. ராணி அறிவாளி என்று மன்னர் அறிவார். அவள் காரண காரியம் இல்லாமல் அப்படி பேச மாட்டாள் ராணி. முட்டாள் அரசன் என்று ஏன் சொன்னாள் என்று மன்னர் அறிய முடியவில்லை. யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. தன் அறைக்கு சென்றுவிட்டார். மன்னர் வருத்தமாய் உட்கார்ந்து இருந்தார். அப்போது அமைச்சர் அவரிடம் வாருங்கள் முட்டாள் அரசரே அமைச்சர் சிரித்துக்கொண்டே கூறினார். மன்னர் கண்களை உயர்த்தி கேட்டார் அது சரி நீ என்னை முட்டாள் அரசன் என்று ஏன் சொல்கிரீர்கள். அமைச்சர் சொன்னார் மனிதற்களில் 5 விதமான முட்டாள்கள் உள்ளார்கள். என்று சொல்லப்படுகிறார்கள் இருவர் தனித்து பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் அழைக்கப்படாமல் முன்னறிவிப்பின்றி சென்று நிற்பவன்.
முட்டாள் என்று அழைக்கப்படுகிறான். இருவர் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் பேசி முடிக்கும் முன் குறிகிட்டு பேசுபவன். ஒரு முட்டாள் என்று அழைக்கப்படுகிறான். ஒருவன் தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவன் பேசி முடிக்கும் முன்னரே பேசுபவனும் முட்டாள் என்று அழைக்கப்படுகிறான். குற்றமில்லாதவரிடம் குற்றம் கண்டு தூற்ருபவனும் முட்டாள் என்று அழைக்கப்படுகிறார்கள். மேற்கண்ட குணங்கள் இருப்பவர் இடத்தில் நட்பு வைத்திருப்பவரும் முட்டாள்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். என்று அமைச்சர் கூறினார். இதைக்கேட்ட மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
கருத்துகள் இல்லை