இரு குதிரைகள்
இரு குதிரைகள்
ஒரு வியாபாரியினிடத்தில் இரண்டு மட்டக்குதிரைகள் இருந்தன. அவன் அவைகளின் மீது பொருட்களை வைத்து மலையில் உள்ள கிராமங்களில் விற்று வந்தான். ஒரு தடவை அதில் ஒரு குதிரைக்கு நோய் வந்தது. தன்னுடைய ஒரு குதிரைக்கு உடல்நிலை சரியில்லை என்று வியாபாரிக்கு தெரியாது. அவன் கிராமத்தில் விற்பதற்காக உப்பு, வெல்லம், பருப்பு, அரிசி முதலியவைகளை எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது.
அவன் இரு குதிரைகளின் மேலும் சமமான பொருட்களை சுமத்தினான். பின் புறபட்டன் மேடுகளில் ஏறி செல்ல நோயாளி குதிரைக்கு மிகவும் கடினமாக இருந்தது. அது மற்றொரு குதிரையிடம் சொன்னது. இன்று என் உடல்நிலை சரியில்லை நான் என் முதுகில் உள்ள ஒரு சாக்கு மூட்டையை விழ செய்கிறேன் எஜமானர் அதை உன் முதுகில் வைப்பார். என் பளு குறைந்ததும் நான் உன்னுடன் வருவேன் நீ முதலில் சென்று விட்டால் அந்த மூட்டையை மறுபடியும் என் முதுகில் வைத்து விடுவார். மற்றொரு குதிரை கூறியது உன் பாரத்தை சுமக்க நான் ஏன் நிற்க வேண்டும். என் முதுகில் குறைவான சுமையா இருக்கிறது.
நான் என் பங்கை மட்டும் தான் சுமப்பேன் என்றது. நோயாளி குதிரை பேசவில்லை. ஆனால் அதனுடன் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. போகும் சமயம் ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்து உருண்டு இருந்தது. குதிரையை இழந்ததால் வியாபாரி மிகவும் வருத்தப்பட்டான். சிறிது நேரம் அங்கு நின்றான். இறந்த குதிரையின் சுமைகளை மற்றொரு குதிரையின்மேல் கட்டினான். இப்பொழுது குதிரை மனதில் வருந்தி சொல்லி கொண்டிருந்தது. என் நண்பனின் சொல்படி ஒரு மூட்டையை வாங்கிக்கொண்டிருந்தால் இப்போது அனைத்து மூட்டைகளையும் சுமக்க வேண்டி இருக்காது. கஷ்டத்தில் உள்ள தன் நண்பனுக்கு உதவி செய்யாவிடில் பின்னால் வருந்த நேரிடுகிறது. இதிலிருந்து கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி வேண்டும் என்பது தெளிவாகத்தெரிகிறது.
கருத்துகள் இல்லை