கடவுளின் பைகள்
கடவுளின் பைகள்
இவ்வுலகை படைக்கும் கடவுள் ஒரு தடவை மனிதனை தன்னிடம் கூப்பிட்டுக் கேட்டார். நீ என்ன விரும்புகிறாய். மனிதனாக வாழ விரும்புகிறேன். சுகமும் அமைதியையும் அடைய விரும்புகிறேன். மேலும் எல்லோரும் என்னை புகழ்ந்து கொண்டாட விரும்புகிறேன் என்றான். கடவுள் அம்மனிதனுக்கு எதிரில் இரண்டு மூட்டைகள் நிரப்பி கொடுத்தார்.
அவர் சொன்னார். இதில் ஒரு மூட்டையில் உன் பக்கத்து வீட்டுக்காரரின் குற்றங்கள் நிரம்பி உள்ளன. இதை முதுகில் மாட்டிக்கொள் இதை எப்போதும் மூடிய வைத்திரு நீயும் பார்க்கக்கூடாது. மற்றவர்களுக்கும் காண்பிக்கக்கூடாது. மற்றொரு மூட்டையில் உன்னுடைய குற்றங்கள் நிரம்பி உள்ளன. அதை எதிரில் தொங்கவிடு அடிக்கடி அதை திறந்து பார் என்றார். மனிதன் இரு மூட்டைகளையும் எடுத்து கொண்டான். ஆனால் அவன் ஒன்றை மட்டும் மறந்து விட்டான். அவன் தன் கெட்ட குண மூட்டையை முதுகில் கட்டிக்கொண்டு அதன் வாயை இழுத்து மூடி விட்டான்.
தன் பக்கத்து வீட்டில் உள்ளவரின் தீய குணமுடைய மூட்டையை எதிரில் தொங்கவிட்டான். அதன் வாயைத் திறந்து பார்ப்பான் பிறருக்கும் காண்பிப்பான். அதனால் அவன் கேட்ட வரங்கள் எல்லாம் எதிராக கிடைத்தன. அவன் கீழ் நிலைக்கு செல்ல தொடங்கினான். அவனுக்கு வாழ்வில் வருத்தமும் அமைதியின்மை ஏற்பட்டது. எல்லா ஜனங்களுக்கும் அவனை கெட்டவன் என திட்டினார்கள். நீங்கள் இந்த தவறை செய்யாமல் இருப்பின் நற்கதி கிடைக்கும். உங்களுக்கு சுகமும் அமைதியும் கிடைக்கும். இந்த உலகம் உங்களை மதிக்கும் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் அறிமுகமானவர்களின் தவறுகளை பார்ப்பதை விட்டு விட வேண்டும். உங்களுடைய தவறுகளில் எப்போதும் கவனம் இருக்க வேண்டும்
கருத்துகள் இல்லை