ஈக்களின் பேராசை
ஈக்களின் பேராசை
ஒரு வியாபாரி தன் வாடிக்கையாளருக்கு தேன் விற்று கொண்டிருந்தான். வியாபாரியின் கையில் இருந்த தேன் பாத்திரம் திடீரென்று கீழே விழுந்து தரையில் கொட்டி விட்டது. முடிந்த அளவு கீழே சிந்திவிட்ட தேனை வியாபாரி எடுத்துவிட்டான். ஆயினும் சிறிதளவு தேன் தரையோடு ஒட்டிக்கொண்டு இருந்தது . அநேக ஈக்கள் தேனின் இனிப்பு சுவையின் ஆசையால் வந்து உட்கார்ந்தன. இனிப்பான தேன் அவைகளுக்கு பிடித்ததால் வந்து வேகமாக உண்டு கொண்டிருந்தன. வயிறு நிரம்பும் வரை உண்டு கொண்டிருந்தன. வயிறு நிரம்பியதும் ஈக்கள் பறந்து செல்ல விரும்பின. ஆனால் அவைகளின் இறக்கைகள் தேனில் ஒட்டிக் கொண்டுவிட்டன. பறக்க முயற்சி செய்ய செய்ய மேலும் மேலும் இறக்கைகள் ஒட்டிக்கொண்டன. அவைகளின் உடல் முழுவதும் தேன் ஒட்டிக்கொண்டு விட்டது. பறக்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தன.
நிறைய ஈக்கள் தேனில் புரண்டு புரண்டு இறக்கைகளை விடுவிக்க முடியாமல் இறந்து விட்டன. ஆனால் இன்னும் நிறைய ஈக்கள் தேனை உண்ணும் ஆசையால் அங்கே வந்து கொண்டிருந்தன. இறந்தவர்களையும் துடித்துக்கொண்டிருப்பவர்களையும் பார்த்தும் கூட அவைகளால் தேனுண்ணும் பேராசையை விடமுடியவில்லை. ஈக்களின் துன்பங்களையும் அவைகளின் முட்டாள்தனத்தையும் பார்த்து வியாபாரி சொன்னார். எந்த ஜனங்கள் நாக்கு ருசிக்காக பேராசைப்படுகிறார்களோ. அவர்கள் ஈக்களைப் போல சிறிது நேர இன்பத்திற்க்காக தங்கள் பணத்தை இழக்கின்றனர். நோயாளிகளாகி துடிக்கின்றனர். மேலும் விரைவில் மரணத்தை தழுவுகின்றனர்.
கருத்துகள் இல்லை