முயல்களும் தவளையும்
முயல்களும் தவளையும் ஒரு தடவை சில முயல்கள் கோடை காலத்தில் ஒரு வரண்ட பகுதியில் புதரில் ஒன்று சேர்ந்தன. வயல்களில் தானியம் இல்லாததால் அவைகளெல்லாம் பசியோடு இருந்தன. தவிர இந்நாட்களில் காலை மாலை மனிதர்களுடன் உலா வரும் நாய்கள் அவைகளை விரட்டின. மைதானத்தில் உள்ள புதர்களும் நாய்கள் விடாமல் துரத்துவதால் ஒளிந்துகொள்ள முடியாமல் துன்புற்றன. ஆகவே அமைதி இழந்து காணப்பட்டன. கடவுள் நம் குலத்திற்கு மிகவும் அநியாயம் செய்திருக்கிறார். நம்மை பலமில்லாமலும் சிறிய உருவத்துடனும் படைத்திருக்கிறார். நமக்கு மானைப்போல கொம்புகளும் அல்லது பூனையைப் போல விரல்களோ அளிக்கவில்லை. இதிலிருந்து தப்புவதற்கு எவ்வித வலியும் இல்லை என்றாலும் நாம் தப்பியோட வேண்டியுள்ளது. எல்லா பக்கங்களிலிருந்தும் படைப்புக் கடவுள் பலவீனத்தை நம்மவர்களின் தலையில் சுமத்தி விட்டார். மற்றொரு முயல் சொன்னது நான் இந்தத் துயரமும் கவலையும் நிறைந்த வாழ்க்கையில் துன்பப்படுகிறேன். நான் குளத்தில் மூழ்கி இறக்க முடிவு செய்துள்ளேன். மூன்றாவது முயல் சொன்னது நானும் இரக்க விரும்புகிறேன். இனிமேலும் கஷ்டப்பட என்னால் முடியவில்லை. நாங்கள் அனைவரும் உன்னுடன் வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றாகவே இறப்போம் என்று எல்லா முயலும் கூறினர். எல்லா முயலும் குளத்தை நோக்கி சென்றன. குளத்தில் இருந்து வெளியே வந்து தவளை கரையில் உட்கார்ந்திருந்தன. முயல்கள் வருகை சப்தம் கேட்டதும் அவைகள் தண்ணீரில் பட் பட் என பயந்து கொண்டே தண்ணீரில் குதிப்பதைத் பார்த்து முயல் சொன்னது. சகோதரர்களே உயிரை விட வேண்டியதில்லை. வாருங்கள் திரும்பிச் செல்வோம். நம்மை விட சிறிய பயந்த ஜந்துக்கள் உயிருடன் இருந்து வாழ்கின்றன. அப்படிஇருக்க நாம் ஏன் வாழ்க்கையில் விரக்தி அடைய வேண்டும். அதன் வார்த்தையை கேட்டு முயல்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை விட்டுவிட்டு திரும்பி சென்றன. துன்பம் வரும் காலங்களில் அச்சம் தோன்றினால் உலகில் நம்மை காட்டிலும் எத்தனை மக்கள் துயரத்தின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் ஆக நோய்களால் பீடிக்கப்பட்டவர்கலாக வாழ்கின்றார்கள். என்பதை பார்த்தால் நாம் அவர்களைக் காட்டிலும் எவ்வளவு நல்ல நிலையில் இருக்கிறோம் என்று உணர்ந்தால் நம்மை துயரங்கள் தொடராது.
கருத்துகள் இல்லை