நண்பனின் அறிவுரை
நண்பனின் அறிவுரை
முத்துபணக்கார குடியானவன். ஆனால் அவன் சோம்பேறி அவன் தன்வேலைகளை பார்க்க களத்துமேட்டுக்கு போகமாட்டான். தன் பசுக்கள் எருமைகள் கூட எங்கு சென்றன என்று தேட மாட்டான். தன் வீட்டு சாமான்களை பார்த்துக் கொள்ள மாட்டான். எல்லா வேலைகளையும் வேலைக்காரர்களிடம் விட்டுவிடுவான். அவனுடைய சோம்பேறித்தனத்தால் வீட்டின் நிலைமை மோசமாகிவிட்டது கால்நடைகளாலும் லாபம் கிடைக்கவில்லை. ஒருநாள் அவன் நண்பன் வீட்டிற்கு வந்தான் அவனுடைய வீட்டு நிலைமையை பார்த்தான். அவனுக்குஅறிவுரை கூறுவதால் முத்து சோம்பேறித்தனத்தை விடமாட்டான் என்று அவன் அறிந்து கொண்டான் அதனால் அவன் தன் நண்பன் முத்துவின் நன்மைக்காக கூறினான். நண்பா உன்னுடைய கஷ்டத்தை பார்க்க எனக்கு மிகவும் துக்கமாக இருக்கிறது. உன் வறுமையை நீக்க வல்ல ஓர் எளிய வழியை நான் அறிவேன் என்றான். தயவுசெய்து அதை எனக்கு சொல் என்றான் முத்து. எல்லா பறவைகளும் விழிக்கும் முன்பே மானசரோவரில் வசிக்கும் ஒரு வெண்மை நிற அன்னப்பறவை பூமிக்கு வருகிறது. அது பகல் 2 மணி வரை வந்து பின்பு திரும்பிச் செல்கிறது. அது எங்கு எப்போது வருமோ அதை பற்றி தெரியாது. ஆனால் எந்த மனிதன் அதை தரிசனம் செய்கிறானோ செய்கிறானோ. அவனுக்கு வறுமை வருவதில்லை என்று கூறினான். அந்த அன்னத்தை கண்டிப்பாய் தரிசிப்பேன் என்றான் முத்து. கிருஷ்ணன் சென்றுவிட்டான் முத்து மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தான். அவன் வீட்டை விட்டு அன்னப்பறவையை தேடி காட்டிற்கு சென்றான். அங்கே இவனுடைய களத்து மேட்டில் உள்ள கோதுமை குவியலை தன்னுடைய களத்துமேட்டு குவியலில் சேர்க்க ஒரு மனிதன் திருடி கொண்டிருப்பதை அவன் பார்த்தான். முத்துவை பார்த்ததும் அம்மனிதன் வெட்கமடைந்து மன்னிப்பு கேட்டான். களத்து மேட்டில் இருந்து வீடு திரும்பிய உடன் பசுக்கொட்டிலுக்கு சென்றான் பசுக்களைப் பாதுகாப்பவன் பால் கரந்து தன் மனைவியின் பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தான். அவனித்து விட்டு அவனை விரட்டினால் வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டு மறுபடியும் அன்னப்பறவையை தேடி புறப்பட்டான். மேலும் வயலுக்கும் சென்றான். அங்கே அதுவரை வயலில் கூலி ஆட்கள் வரவில்லை அவன் அங்கேயே தங்கி நான் கூலி ஆட்கள் வந்ததும் அவன் நேரம் கழித்து வந்ததற்காக அவர்களை குறை கூறினால் இப்படி அவன் சென்ற இடங்களிலெல்லாம் தனது சொத்து பாலாவதை அவனது பார்வையால் எல்லாம் சரியானது தினந்தோறும் அதிகாலையிலேயே எழுந்து தேடத் தொடங்கினான். இப்போது அவனுடைய வேலை ஆட்கள் சரிவர வேலை செய்ய தொடங்கினர் வேலையாட்களின் திருட்டு நின்று போனது முதலில் அவன் நோயாளியாக இருந்தால் இப்பொழுது அவன் நோய் நீங்கி உடல் நலம் பெற்று விட்டான். முதலில் வயலில் 10 மடங்கு தானியம் கிடைத்தது. இப்போது 25 மடங்கு கிடைக்கத் தொடங்கியது. பசுக்கொட்டில் இருந்தாலும் மிக அதிகமாக வரத் தொடங்கியது. ஒரு நாள் மறுபடியும் என் நண்பன் அவனுடைய வீட்டிற்கு வந்தான். முத்து சொன்னான் நண்பா வெள்ளை எண்ணம் எனக்கு இதுவரை தென்படவில்லை ஆனால் அதை தேடுவதில் ஈடுபட்டதில் இருந்து எனக்கு லாபம் நிறைய கிடைத்துள்ளது. என்றான். .கிருஷ்ணன் சிரித்து விட்டு சொன்னான் உழைப்புதான் அந்த வெள்ளைநிற அன்ன பறவை உழைப்பின் இறக்கை எப்போதும் ஒளி மிக்கதாக இருக்கிறதோ யார் வேலையாட்களின் பொறுப்பிலே விடுகிறார்களோ அவர்கள் நஷ்டம் அடைகின்றார்கள். யார் வேலையாட்களையும் கண்காணிக்கிறார்கள் மதிப்பையும் செய்கிறார்கள் என்று கூறினான்.
கருத்துகள் இல்லை