தந்தையும் மகனும்
தந்தையும் மகனும்
ஒரு தந்தை தன் மகனை மடியில் அமர்த்தி கொண்டு உட்கார்ந்திருந்தார். எங்கிருந்தோ ஒரு காக்கை பறந்து வந்து வீட்டுக் கூரையின் மீது எதிரே உட்கார்ந்து பையன் தந்தையிடம் இது என்ன என்று கேட்டான். தந்தை காக்கை என்றார் மறுபடியும் பையன் இது என்ன என்று கேட்டான். மறுபடியும் தந்தை காக்கை என்றார். பையன் மேலும் மேலும் என்ன என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தான். தந்தையும் பாசத்துடன் மேலும் மேலும் காக்கை காக்கை என கூறினார். சில வருடங்களில் தந்தை கிழவனார். பையன் பெரியவனானான் ஒருநாள் தந்தை பாயில் உட்கார்ந்து இருந்தார். பையனை சந்திக்க யாரோ ஒருவர் வீட்டிற்கு வந்தார் தகப்பனார் யார் வந்தார்கள் எனக் கேட்டார். பையன் பெயரை சொல்லி அவர் வந்தார் என்று கூறினான். சிறிது நேரத்தில் மறுபடியும் வேறு ஒருவர் வந்தார். தந்தை யார் என்று கேட்டார். இந்தத் தடவை எரிச்சலுடன் பையன் சொன்னான். நீங்கள் ஏன் பேசாமல் இருப்பதில்லை உங்களுக்கு வேலை வெட்டி இல்லை யார் யார் வந்தார் என்று நாள் முழுவதும் கேட்டுகொண்டே இருக்கிறர்கள் என்று கூறினான். தந்தை பெருமூச்சு விட்டார் கையால் தலையை பிடித்துக் கொண்டார். துயரம் நிறைந்த மெல்லிய குரலில் சொல்லத்தொடங்கினார். நான் ஒரு முறை கேட்டதற்கு நீ இப்போது கோபப்படுகிறாய். நீ ஒரே வார்த்தையை நூறு தடவைக்கு மேல் இது என்ன இது என்ன என்று கேட்டாய் நான் உன்னை ஒரு தடவைகூட கோபிக்காமல் இது காகம் என்று சொன்னேன். என்றார். இப்படி தன் தாய் தந்தையரை அவமதிக்கும் பிள்ளைகள் கெட்டவர்கள் தாய் தந்தையர் குழந்தையை வளர்க்க எத்தனை துன்பங்களை ஏற்றுக் கொண்டார்கள். எத்தனை அன்பு காட்டினார் என்பதை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை