கருணையின் பலன்
கருணையின் பலன்
மன்னன் ஒருவன் முதலில் ஏழையாக இருந்தான் அப்போது அவன் சாதாரண சிப்பாயாக இருந்தான் ஒருநாள் அவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டையாட காட்டிற்கு சென்றான். அன்று அவனுக்கு வெகு தூரம் அலைந்து திரிய நேரிட்டது வெகு தூரம் சென்ற பின் ஒரு பெண் மானும் அதன் குட்டிகளும்தான் அவன் கண்ணில் பட்டன் . அதன் பின்னால் குதிரையை செலுத்தினான் பயத்தால் மான் ஓடத்துவங்கியது . குட்டியை பிடித்து . குதிரையின் மேல் வைத்தான் தாய் மான் புதருக்குள் பதுங்கியது அவன் மிகவும் தேடி அலைந்தும் கிடைக்காததால் அந்த குட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு திரும்ப நேரிட்டது எடுத்து செல்வதை தாய் மான் பார்த்து புதரிலிருந்து வெளியே வந்து குதிரையின் பின்னால் ஓட தொடங்கியது. வெகு தூரம் சென்ற பிறகு பின்னால் திரும்பிப் பார்த்தான் சிப்பாய் தன் பின்னால் தாய் மான் வருவதை கண்டு இரக்கப்பட்டான் . மான் குட்டியின் கால்களை அவிழ்த்து விட்டான். குதிரையின் மேலிருந்து இறக்கி விட்டு சென்று விட்டான். வீடு திரும்பிய பின் இரவில் உறங்கும் போது ஒரு கனவு கண்டான் அதில் யாரோ ஒரு தேவதூதன் சொல்கி றான். மான்குட்டிக்கு கருணை காட்டியதால் இறைவன் சந்தோஷமடைந்து உன் பெயரை மன்னரின் பட்டியலில் எழுதி இருக்கிறார். நீ ஒரு நாள் அரசனாவாய் என்று தேவதூதன் கூறினான் கனவு உண்மையானது. பின்னாட்களில் அவன் மன்னன் ஆனான். ஒரு மானிடம் இரக்கம் கொண்டதற்கு அவனுக்கு இந்த வெகுமதி கிடைத்தது யார் உயிரினங்களுக்கு இரக்கம் காட்டுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் இறைவன் கருணை செய்கிறார்
கருத்துகள் இல்லை