நல்ல மனிதன்
நல்ல மனிதன்
பணக்காரர் ஒருவர் கோவில் ஒன்று கட்டினார்.கோவிலின் தேவைக்காக அனேக பூமி, வயல், தோட்டங்களை கோவில் பெயருக்கு எழுதி வைத்தார். கோவிலுக்கு வரும் ஏழை எளியவர்கள் இரண்டு மூன்று தினங்கள் தங்கினாலும் அவர்கள் அனைவருக்கும் கடவுளின் பிரசாதம் கிடைக்கும்படி செய்தார். மற்ற வேலைகளை சரிவர நடத்திச் செல்ல அவர்களுக்கு தகுதி வாய்ந்த ஒரு நல்ல மனிதர் தேவைப்பட்டார்.
பல மனிதர்கள் பணக்காரரிடம் வந்தார்கள் கோவிலில் வேலை கிடைத்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் எனக்கு ஒரு நல்ல மனிதன் வேண்டும் அதனை நானே தேர்ந்தெடுத்து கொள்வேன் என அனைவரையும் திருப்பி அனுப்பிவிட்டார். அவர்கள் மனதிற்குள்ளேயே பணக்காரர்களை திட்டி கொண்டார்கள். பலர் அவனை முட்டாள் பைத்தியம் என சொன்னார்கள். ஆனால் பணக்காரர் யார் பேச்சையும் லட்சியம் செய்யவில்லை. கோவில் கதவு திறந்து தரிசனத்திற்காக ஜனங்கள் வரத் தொடங்கிய உடன் பணக்காரர் தன் வீட்டு மாடியில் அமர்ந்து மௌனமாக அந்த ஜனங்களை பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு நாள் ஒரு மனிதன் கோவிலுக்கு பகவானின் தரிசனத்திற்காக வந்தான் அவனது ஆடைகள் கிழிந்து பழுதடைந்தும் இருந்தன. அவன் அதிகம் படித்தவனாகவும் தோன்றவில்லை கடவுளை தரிசித்து விட்டு அவன் திரும்பும் சமயம் அவனை தன்னிடம் கூப்பிட்டு கேட்டார். நீங்கள் இக்கோயிலை பராமரிக்கும் வேலையை ஏற்றுக் கொள்கிறீர்களா அந்த மனிதனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
அவன் சொன்னான் நான் அதிகம் படித்தவன் அல்ல இவ்வளவு பெரிய கோவிலை எப்படி நிர்வகிப்பேன். பணக்காரர் சொன்னார் எனக்கு அதிகம் படித்த மனிதன் தேவை இல்லை. ஒரு நல்ல மனிதனை மேற்பார்வையாளராக நியமிக்க விரும்புகிறேன். மனிதன் சொன்னார் இத்தனை மனிதர்களின் என்னை மட்டும் எப்படி நல்லவன் என்று மதிப்பிடீர்கள். பணக்காரர் சொன்னார் நீங்கள் நல்லவர் என்று எனக்கு தெரியும் கோவிலின் வழியில் ஒரு செங்கல் துண்டு துருத்திக் கொண்டிருந்தது ஜனங்கள் அந்த பாதையில் பல நாட்களாக சென்று கொண்டு வந்தனர் ஜனங்கள் விழுந்தும் தடுமாறியும் சென்று கொண்டிருந்தனர் நீங்கள் அந்த முனையில் அடிபடாவிட்டாலும் அதை பார்த்ததும் அதை பிடுங்கி எறிய முயற்சித்தீர்கள்.
என்னுடைய வேலையாட்களிடம் இருந்து மண்வெட்டி கேட்டு வாங்கி கல்லை அகற்றி விட்டு பூமியை சமப்படுத்தியதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த மனிதன் சொன்னான் இது பெரிய விஷயமில்லை வழியில் உள்ள பாதிப்பு உண்டாக்கும் கற்களை எடுத்தெறிவது ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாகும் என்று சொன்னார் தன்னுடைய கடமையை அறிந்தவனும் அதை கடைபிடிப்பவனும் நல்ல மனிதன் ஆகிறான். அந்த மனிதன் அதிகாரியாகி நல்ல முறையில் கோவிலை நிர்வாகம் செய்தான்
கருத்துகள் இல்லை