கருணையின் பலன்

                      கருணையின் பலன்

                  மன்னன் ஒருவன் முதலில் ஏழையாக இருந்தான்  அப்போது அவன் சாதாரண சிப்பாயாக இருந்தான்  ஒருநாள் அவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டையாட காட்டிற்கு சென்றான். அன்று அவனுக்கு வெகு தூரம் அலைந்து திரிய நேரிட்டது வெகு தூரம் சென்ற பின் ஒரு பெண் மானும் அதன் குட்டிகளும்தான் அவன்  கண்ணில் பட்டன் . அதன் பின்னால் குதிரையை செலுத்தினான்  பயத்தால் மான் ஓடத்துவங்கியது . குட்டியை பிடித்து . குதிரையின் மேல் வைத்தான் தாய் மான் புதருக்குள் பதுங்கியது அவன் மிகவும் தேடி அலைந்தும் கிடைக்காததால் அந்த குட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு திரும்ப நேரிட்டது எடுத்து செல்வதை  தாய் மான் பார்த்து  புதரிலிருந்து  வெளியே வந்து குதிரையின் பின்னால் ஓட தொடங்கியது. வெகு தூரம் சென்ற பிறகு பின்னால் திரும்பிப் பார்த்தான் சிப்பாய்  தன் பின்னால் தாய் மான் வருவதை கண்டு  இரக்கப்பட்டான் . மான் குட்டியின்  கால்களை  அவிழ்த்து விட்டான்.  குதிரையின் மேலிருந்து இறக்கி விட்டு  சென்று விட்டான்.  வீடு திரும்பிய பின் இரவில் உறங்கும் போது ஒரு கனவு கண்டான் அதில் யாரோ ஒரு தேவதூதன் சொல்கி றான். மான்குட்டிக்கு   கருணை காட்டியதால் இறைவன் சந்தோஷமடைந்து உன் பெயரை மன்னரின் பட்டியலில் எழுதி இருக்கிறார். நீ ஒரு நாள் அரசனாவாய்  என்று தேவதூதன் கூறினான்  கனவு உண்மையானது. பின்னாட்களில் அவன் மன்னன் ஆனான். ஒரு மானிடம்  இரக்கம் கொண்டதற்கு அவனுக்கு இந்த வெகுமதி கிடைத்தது யார் உயிரினங்களுக்கு இரக்கம் காட்டுகிறார்களோ அவர்களுக்கு  நிச்சயம்   இறைவன் கருணை செய்கிறார்

தந்தையும் மகனும்

                                                       தந்தையும் மகனும் 
               ஒரு தந்தை  தன் மகனை மடியில் அமர்த்தி கொண்டு உட்கார்ந்திருந்தார். எங்கிருந்தோ ஒரு காக்கை பறந்து வந்து வீட்டுக் கூரையின் மீது எதிரே உட்கார்ந்து பையன் தந்தையிடம் இது என்ன என்று கேட்டான். தந்தை காக்கை என்றார் மறுபடியும் பையன் இது என்ன என்று கேட்டான். மறுபடியும் தந்தை காக்கை என்றார். பையன் மேலும் மேலும் என்ன என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தான். தந்தையும் பாசத்துடன் மேலும் மேலும் காக்கை காக்கை என கூறினார். சில வருடங்களில் தந்தை கிழவனார். பையன் பெரியவனானான் ஒருநாள் தந்தை பாயில் உட்கார்ந்து இருந்தார். பையனை சந்திக்க யாரோ ஒருவர் வீட்டிற்கு வந்தார் தகப்பனார் யார் வந்தார்கள் எனக் கேட்டார். பையன் பெயரை சொல்லி அவர் வந்தார் என்று  கூறினான். சிறிது நேரத்தில் மறுபடியும் வேறு ஒருவர் வந்தார். தந்தை யார் என்று கேட்டார். இந்தத் தடவை எரிச்சலுடன் பையன் சொன்னான். நீங்கள் ஏன் பேசாமல் இருப்பதில்லை உங்களுக்கு வேலை வெட்டி இல்லை யார் யார்  வந்தார் என்று நாள் முழுவதும் கேட்டுகொண்டே இருக்கிறர்கள் என்று கூறினான். தந்தை பெருமூச்சு விட்டார் கையால் தலையை பிடித்துக் கொண்டார். துயரம் நிறைந்த மெல்லிய குரலில் சொல்லத்தொடங்கினார். நான் ஒரு முறை கேட்டதற்கு நீ இப்போது கோபப்படுகிறாய். நீ ஒரே வார்த்தையை நூறு தடவைக்கு மேல் இது என்ன இது என்ன என்று கேட்டாய் நான் உன்னை ஒரு தடவைகூட கோபிக்காமல் இது காகம்  என்று சொன்னேன். என்றார். இப்படி தன் தாய் தந்தையரை அவமதிக்கும் பிள்ளைகள் கெட்டவர்கள் தாய் தந்தையர் குழந்தையை வளர்க்க எத்தனை துன்பங்களை ஏற்றுக் கொண்டார்கள்.  எத்தனை அன்பு காட்டினார் என்பதை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்.

பேராசைகொண்டஅரசன்

              பேராசை கொண்ட அரசன்         
                                ஐரோப்பாவில் யூனான் என்னும் நாடு உள்ளது பழங்காலத்தில் யூனானில் மிடாஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அரசன் மிகவும் பேராசைக்காரன் அவனுக்கு தன் அன்பு மகளை தவிர வேறு ஏதேனும் ஒரு பொருளின் மேல் ஆசை இருக்குமானால் அது தங்கம் தான். இரவு உறங்கும் போது கூட அவன் தங்கத்தை சேமிப்பது போன்ற கனவு கண்டு கொண்டிருந்தார்.
                                  ஒரு நாள் மிடாஸ் மன்னன் தன் பொக்கிஷ அறையில் அமர்ந்து தங்க கட்டிகளையும் தங்க நாணயங்களையும் எண்ணிக்கொண்டிருந்தான். திடீரென்று அங்கு ஒரு தேவதூதன் தோன்றினான்  அவன் தங்கத்தின் மீது கொண்டுள்ள ஆசை பார்த்து நீ பெரிய பணக்காரன் என்று சொன்னான். மிடாஸ் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு பதில் சொன்னான். மிக குறைந்த அளவே தங்கம் உள்ள நான் எப்படி பணக்காரனாவேன் என்று  சொன்னான் உனக்கு சந்தோஷம் இல்லையா உனக்கு இன்னும் எவ்வளவு தங்கம் வேண்டும் என்று தேவதூதன் கேட்டான்.
                      நான் எந்தப் பொருளைத் தொட்டாலும் அது  தங்கமாக மாறி விட வேண்டும் என்று விரும்புகிறேன். தேவதூதன் சிரித்து விட்டு சொன்னான் நாளை காலை  வேலையில் இருந்து எந்தப் பொருளைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாறும் என்று கூறி மறைந்துவிட்டான். அன்றிரவு தூக்கமே வரவில்லை மிகவும் அதிகாலையிலேயே எழுந்து விட்டான் அவன் ஒரு நாற்காலியை தொட்டபோது  நாற்காலி  தங்கமாக மாறியது மகிழ்ச்சியோடு  நடனமாட தொடங்கினான்.
                            அவனுடைய நந்தவனத்திற்கு சென்று  பூக்கள் பழங்கள் இலைகள் கிளைகள் பூந்தொட்டிகள் அனைத்தையம் தொட்டான்.   எல்லாம் தங்கமாக மாறி விட்டது. அலைந்து திரிந்து களைத்து விட்டான் அவன் ஆடை  கூட தங்கமாக மாறி மிகவும் கனமாக ஆகிவிட்டதை அவன் அறியவில்லை அவனுக்கு தாகமும் பசியும் உண்டாகியது.  நந்தவனத்தில் இருந்து தன்னுடைய அரண்மனைக்கு வந்து ஒரு தங்க நாற்காலியில் உட்கார்ந்தான். ஒரு வேலைக்காரன் அவன் முன்னால்  நீரும் பழமும் கொண்டுவந்து வைத்தான். முன்புபோல் உணவருந்துவதற்கு தட்டில் கை வைத்தவுடன் எல்லா சாப்பாடும்  நீரும்   கோப்பையை தொட்டதும் தங்கம் ஆகியது .
                              தங்க உருளைக்கிழங்கு வைக்கப்பட்டிருந்தன .தங்கத்தை  உண்டு   பசி தீர முடியுமா   அழத்தொடங்கினான்.   அதே சமயம் அவளது மகள் விளையாடிக்கொண்டே அங்கு வந்தால் அதை பார்த்து அவன் மடியில் ஏறி அவனுடைய கண்ணீரைத் துடைக்கத் தொடங்கினாள்.   அரசன் தழுவிக்கொண்டான் ஆனால் அவன்   மடியில் தாங்க முடியாத  கணத்தில் தங்க உருவமாக இருந்தாள்.  தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினான் தேவனுக்கு இறக்கம் வந்தது. அவன் மறுபடியும் தோன்றினான். அவனைப் பார்த்ததும் அவன் கால்களில் விழுந்து நடுங்கிக்கொண்டே துடிக்க தொடங்கினான். நீங்கள் உங்கள் வரத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் தேவதூதன் கேட்டார்.
                                   உனக்கு இப்போது தங்கம் வேண்டாமா ஒரு கோப்பை தண்ணீரா  அல்லது தங்கமா ஒரு ரொட்டித் துண்டு சிறந்ததா அல்லது தங்கமா கைகூப்பி கொண்டு சொன்னான். எனக்கு தங்கம் வேண்டாம் மனிதனுக்கு தேவையற்றது. என்று நான் அறிந்து கொண்டேன். தங்கம் இல்லாமல் மனிதனுக்கு எந்த வேலையும் தடைபடாது ஒரு குவளை நீரும்  ஒரு கவளம் சோறு மின்றி எந்த வேலையும் மனிதனுக்கு நடக்காது.  பேராசை படமாட்டேன் என்றான்.  நீரை கொடுத்து இதை எல்லாவற்ற்றின் மேலும்   தெளித்து  விடு என்று சொன்னான். அந்த நீரை தன் மகள். மேஜை நாற்காலி, உணவு, தண்ணீர் மற்றும் பூந்தோட்டத்தில் உள்ள மரங்கள் எல்லாவற்றிலும் தெளித்தான்  எல்லா பொருட்களும் முன்பிருந்தது போலவே மாறிவிட்டன போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

உண்மையான விறகுவெட்டி

                                                                                        உண்மையான  விறகுவெட்டி
                             முருகன் கள்ளங்கபடமற்ற நேர்மையான மனிதன் அவன் மிகவும் ஏழை நாள்முழுவதும் காட்டில் உலர்ந்த விரகை  வெட்டி மாலையில் அதை கட்டாக கட்டி கடைத்தெருவிற்கு கொண்டு செல்வான் விறகு விற்ற பணத்தில் அரிசி உப்பு முதலியன வாங்கி திரும்பி வருவான் அவன் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை என்று எண்ணாமல் மகிழ்ச்சியாகவே இருந்தான் .
                            ஒருநாள் முருகன் விறகுவெட்ட காட்டிற்கு சென்றான் ஒரு நதிக்கரையில் உள்ள மரத்தின் உலர்ந்த தலையை வெட்ட மரத்தின் மேல் ஏறினான் தலையை வெட்டும் போது அவனுடைய கோடரி பிடியிலிருந்து நழுவி நதியில் விழுந்து விட்டது முருகன் மரத்திலிருந்து இறங்கி நதியில் பலமுறை மூழ்கியும் அவனுடைய கோடாரி கிடைக்கவில்லை முருகன் கவலையுடன் இரு கைகளாலும் தலையை பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டான் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்கியது அவனிடத்தில் இன்னொரு கோடரி  வாங்க காசில்லாமல் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றுவது எப்படி என்று அவன் மிகவும் கவலை பட்டான் இதை பார்த்துக்கொண்டிருந்த வன தேவதை  அது மனித உருவத்தில் அவன்முன் தோன்றி ஏன் அழுகிறாய் என்று கேட்டது எனது கோடரி  நதியில் விழுந்து விட்டது நான் எப்படி விறகுவெட்டி என்  குழந்தைகளுக்கு உணவளிப்பேன் என்று கூறினான் .
                            நான்  அதை எடுத்து தருகிறேன் என்று கூறி தேவதைநீரில் மூழ்கி ஒரு தங்க கோடாரியுடன் வெளியே வந்தது நீ உன்னுடைய கோடாரியை எடுத்துக்கொள் என்றது முருகன் தலை நிமிர்ந்து பார்த்து சொன்னான் இது பெரிய மனிதர்களின் கோடரி இது என்னுடையது இல்லை என்றான்  தேவதை இரண்டாம் தடவை மறுபடியும் வெள்ளி கோடரியை  வெளியே எடுத்து கொண்டு வந்து கொடுத்தது இது இல்லை என்றான் எனது கோடரி  சாதாரண இரும்புக் கோடரி என்றான் மீண்டும் ஆற்றில் மூழ்கி அதை   கோடாரியை எடுத்து கொடுத்தது  முருகன் சந்தோஷப்பட்டான் நன்றி செலுத்தி தன்னுடைய கோடாரியை பெற்றுக்கொண்டான்.
                              நேர்மையான  உணர்வையும் நாணயத்தையும் கண்டு சொல்லியது உன்னுடைய செயலை நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நீயே என் இரண்டு கோடாரியையும்  எடுத்து செல் என்றது  தங்கம் வெள்ளி கோடாலிகளை  பெற்ற முருகன் பணக்காரர் ஆகி விட்டான் அவன் இப்போது விரகு வெட்ட  செல்வதில்லை அவனுடைய அண்டை வீட்டுக்காரர்  பின்னர் என்னிடம் கேட்டான் நீ ஏன் இப்போதெல்லாம் விறகு வெட்ட  செல்வதில்லை கள்ளங்கபடமற்ற முருகன் எல்லா விஷயங்களையும் சொன்னால் பேராசை காரணம் சின்னப்பன் மனிதர்களின் பேராசையால் அதை எடுத்துக்கொண்டு அதே காட்டிற்குச் சென்றான்.
                            அந்த மரத்தில் நிறைவுபெற்ற தொடங்கினான் அவன் வேண்டுமென்றே தன் கோடாலியை தானாக நதியில் போட்டுவிட்டு மரத்திலிருந்து நதிக்கரையில் அமர்ந்து அழத்தொடங்கினான் பேராசைதனம் கண்டு  நதியில் மூழ்கி வெளியே வந்தது அதை பார்த்ததுமே இது என்னுடையது என்று கூச்சலிட்டான் வனதேவதை சொன்னது நீ பொய் சொல்கிறாய் இது உன்னுடைய கோடாரி அல்ல என்று கூறி  அவனது இரும்பு கோடரியை ஆற்றுக்குள் மூழ்கடித்தது . பேராசையால் தன்னுடைய இரும்பு கோடாரியையும் இழந்தான்/  எழுந்து அழுதுகொண்டே வருத்தத்துடன் வீடு திரும்பினான் பேராசை பெரு நஷ்டம் என்பதே இக்கதையின் இருந்து விளங்குகிறது

யோசிக்காமல் வேலை செய்யாதீர்

   யோசிக்காமல் வேலை செய்யாதே                            ஒரு குடியானவன் ஒரு கீரீயை வளர்த்து வந்தான் மிகவும் கெட்டிக்காரத்தனமும் எஜமான விசுவாசம் கொண்டது கீரி குடியானவன் எங்கேயோ சென்றிருந்தால் குடியானவனின் மனைவி தன் கைக் குழந்தைக்கு பால் புகட்டி விட்டு தூங்கச் செய்துவிட்டு கீரியை அங்கேயே விட்டுவிட்டு தண்ணீர் எடுத்து வர கிணற்றடிக்கு குடத்துடன் சென்றால் குடியானவனின் மனைவி சென்ற பின்பு வீட்டிற்குள் ஒரு கருநாகம் அங்கே வந்தது தரையில் விரித்திருந்த துணியில்  தூங்கி கொண்டிருந்த குழந்தையை நோக்கி வந்து கொண்டிருந்தது  .                                                             கீரி குழந்தைக்கு அருகில் பாம்பை  விடாமல் சண்டையிட்டு பாம்பை இரண்டு துண்டுக்கி விட்டு குடியானவனின் மனைவியின் வருகையை எதிர்நோக்கி வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தது.                       தண்ணீர் எடுத்து கொண்டு வீட்டிற்க்கு திரும்பினாள் அவள் வீட்டின் வெளியே கதவருகில் நின்று கொண்டிருந்த  கீரி முகத்தை பார்த்ததும் அவள் தன் குழந்தையை  கடித்துவிட்டது என்று நினைத்தால்  கீரியின் மேல் தண்ணீர் குடத்தை போட்டால் கீரிதுடித்து இறந்து விட்டது.                                                                   வீட்டின் உள்ளே ஓடினாள் அங்கே குழந்தை சுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பதையும் ஒரு கருநாகம் கொல்லப்பட்டி இருப்பதையும் அவள் பார்த்தால் அப்பொழுது தான் அவளுக்கு தன் தவறு தெரிந்தது அவள் ஓடிவந்து கீரியின்அருகில் வந்து இறந்த கீரியை மடியில் எடுத்து கொண்டு அழத் தொடங்கினாள் ஆனால் அவளுடைய அழுகையால் இப்பொழுது என்ன பயன் அதனால்தான் கூறப்படுகிறது யோசிக்காமல் செய்துவிட்டு வருந்துவதால் என்ன பயன் .

நல்ல மனிதன்

                                     நல்ல மனிதன் 

                       பணக்காரர் ஒருவர் கோவில் ஒன்று கட்டினார்.கோவிலின் தேவைக்காக அனேக பூமி, வயல், தோட்டங்களை கோவில் பெயருக்கு எழுதி வைத்தார். கோவிலுக்கு வரும் ஏழை எளியவர்கள்  இரண்டு மூன்று தினங்கள் தங்கினாலும்  அவர்கள் அனைவருக்கும் கடவுளின் பிரசாதம் கிடைக்கும்படி செய்தார்.  மற்ற வேலைகளை சரிவர நடத்திச் செல்ல அவர்களுக்கு தகுதி வாய்ந்த ஒரு நல்ல  மனிதர் தேவைப்பட்டார்.
                                பல மனிதர்கள் பணக்காரரிடம் வந்தார்கள் கோவிலில் வேலை கிடைத்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் எனக்கு ஒரு நல்ல மனிதன் வேண்டும் அதனை நானே தேர்ந்தெடுத்து கொள்வேன் என அனைவரையும் திருப்பி அனுப்பிவிட்டார். அவர்கள் மனதிற்குள்ளேயே பணக்காரர்களை திட்டி  கொண்டார்கள்.  பலர் அவனை முட்டாள் பைத்தியம் என சொன்னார்கள். ஆனால் பணக்காரர் யார் பேச்சையும் லட்சியம் செய்யவில்லை. கோவில் கதவு திறந்து தரிசனத்திற்காக ஜனங்கள் வரத் தொடங்கிய உடன் பணக்காரர் தன் வீட்டு மாடியில் அமர்ந்து மௌனமாக அந்த ஜனங்களை பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு நாள் ஒரு மனிதன் கோவிலுக்கு பகவானின் தரிசனத்திற்காக வந்தான் அவனது ஆடைகள் கிழிந்து பழுதடைந்தும் இருந்தன. அவன் அதிகம் படித்தவனாகவும் தோன்றவில்லை கடவுளை தரிசித்து விட்டு அவன் திரும்பும் சமயம் அவனை தன்னிடம் கூப்பிட்டு கேட்டார். நீங்கள் இக்கோயிலை பராமரிக்கும் வேலையை ஏற்றுக் கொள்கிறீர்களா அந்த மனிதனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
                            அவன் சொன்னான் நான் அதிகம் படித்தவன் அல்ல இவ்வளவு பெரிய கோவிலை எப்படி நிர்வகிப்பேன்.  பணக்காரர் சொன்னார் எனக்கு அதிகம் படித்த மனிதன் தேவை இல்லை. ஒரு நல்ல மனிதனை மேற்பார்வையாளராக நியமிக்க விரும்புகிறேன். மனிதன் சொன்னார்  இத்தனை  மனிதர்களின் என்னை மட்டும் எப்படி நல்லவன் என்று மதிப்பிடீர்கள்.   பணக்காரர் சொன்னார் நீங்கள் நல்லவர் என்று எனக்கு தெரியும் கோவிலின் வழியில் ஒரு செங்கல் துண்டு துருத்திக் கொண்டிருந்தது ஜனங்கள் அந்த பாதையில்  பல நாட்களாக சென்று  கொண்டு வந்தனர் ஜனங்கள் விழுந்தும்   தடுமாறியும் சென்று கொண்டிருந்தனர் நீங்கள் அந்த முனையில் அடிபடாவிட்டாலும் அதை பார்த்ததும் அதை பிடுங்கி எறிய முயற்சித்தீர்கள்.
                         என்னுடைய வேலையாட்களிடம்  இருந்து மண்வெட்டி கேட்டு வாங்கி கல்லை அகற்றி விட்டு பூமியை சமப்படுத்தியதை  நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த மனிதன் சொன்னான் இது பெரிய விஷயமில்லை வழியில் உள்ள பாதிப்பு  உண்டாக்கும் கற்களை  எடுத்தெறிவது  ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாகும் என்று  சொன்னார் தன்னுடைய கடமையை அறிந்தவனும் அதை கடைபிடிப்பவனும்  நல்ல மனிதன் ஆகிறான். அந்த மனிதன் அதிகாரியாகி நல்ல முறையில் கோவிலை நிர்வாகம் செய்தான்
1: #blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px;} 2: .blog-pager {background: none;} 3: .displaypageNum a,.showpage a,.pagecurrent{padding: 5px 10px;margin-right:5px; color: #F4F4F4; background-color:#404042;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);} 4: .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#EC8D04;text-decoration:none;color: #fff;} 5: #blog-pager .showpage, #blog-pager, .pagecurrent{font-weight:bold;color: #000;} 6: .showpageOf{display:none!important} 7: #blog-pager .pages{border:none;-webkit-box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);-moz-box-shadow:0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);box-shadow: 0px 5px 3px -1px rgba(50, 50, 50, 0.53);}